Home /News /thanjavur /

அதிகாரிகள் சாப்பிட்ட தட்டுகளை அகற்றிய மாணவிகள்.. தஞ்சை அரசுப் பள்ளியில் அவலம்..

அதிகாரிகள் சாப்பிட்ட தட்டுகளை அகற்றிய மாணவிகள்.. தஞ்சை அரசுப் பள்ளியில் அவலம்..

மேஜைகளை தூக்கிச் செல்லும் பள்ளி மாணவிகள்

மேஜைகளை தூக்கிச் செல்லும் பள்ளி மாணவிகள்

Tanjore School : பள்ளி மாணவர்களை துப்புரவு பணியில் ஈடுப்படுத்தக்கூடாது என பள்ளிகல்வித்துறை உத்தரவுவிட்டிருந்த நிலையில் அமைச்சர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் இவ்வாறான சம்பவம் அரங்கேறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தஞ்சையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் CEO உள்ளிட்ட அதிகாரிகள் சாப்பிட்ட டீ கப், பேப்பர் தட்டுகளை பள்ளி மாணவிகள் அகற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு அமைச்சர் விடைபெற்றார்.

    இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சிஇஓ சிவக்குமார்  உள்ளிட்ட அதிகாரிகள் தேனீர் மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு விட்டு அந்த குப்பைகளை அங்கேயே விட்டு சென்றிருந்தனர்.

    இதனையடுத்து அங்கிருந்த பள்ளி மாணவிகள் அந்த குப்பைகளை அப்புறப்படுத்தினர், அங்கு இருந்த மேஜைகளை  தூக்கி சென்றனர். மேலும் வந்திருந்த அதிகாரிகளுக்கு டீ, பிஸ்கட் உள்ளிட்டவற்றை அதே பள்ளியில் படிக்கும் மாணவிகள் தான் வழங்கினர் எனவும் தெரிய வந்துள்ளது.

    பள்ளி மாணவர்களை துப்புரவு பணியில் ஈடுப்படுத்தக்கூடாது என பள்ளிகல்வித்துறை உத்தரவுவிட்டிருந்த நிலையில் அமைச்சர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் இவ்வாறான சம்பவம் அரங்கேறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi, School students, Thanjavur

    அடுத்த செய்தி