முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / ரேஷன் கடைகளில் இருக்கும் கருப்பு ஆடுகள்.. பெரும்புள்ளிகளுக்கு செக் வைத்த ராதாகிருஷ்ணன்

ரேஷன் கடைகளில் இருக்கும் கருப்பு ஆடுகள்.. பெரும்புள்ளிகளுக்கு செக் வைத்த ராதாகிருஷ்ணன்

உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

அரிசி கடத்தலில் ஈடுபடும் டிரைவர் மற்றும் ஊழியர்களை கைது செய்யாமல், இதில் ஈடுப்படும் பெரும்புள்ளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் - ராதாகிருஷ்ணன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

நெல் குடோன் மற்றும் ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் மீது புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் அரிசி கடத்தலில் ஈடுபடும் டிரைவர், ஊழியர்களை கைது செய்யாமல் பெரும்புள்ளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே மேலவஸ்தாச்சாவடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்பு கிடைங்கினை உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொள்முதல் செய்யப்படும் நெல் மழை மற்றும் வெயிலினால் சேதம் அடைவதை தவிர்க்கும் பொருட்டு சிமெண்ட் தளம் மற்றும் இரும்பு மேற்கூறையுடன் கூடிய கிடங்கு 35.20 கோடி ரூபாயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் 58,500 மெட்ரிக் டன் நெல்லை சேமிக்க முடியும், இந்த பணிகள் வரும் நவம்பர் மாதத்துக்குள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.

Also Read : பயணிகளுடன் குழிக்குள் சிக்கிய தனியார் பேருந்து.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

மேலும் அரிசி கடத்தல் தொடர்பாக நேற்று மட்டும் இரண்டு ஆலைகளில் 128 மெட்ரிக் டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இனிமேல் அரிசி கடத்தலில் ஈடுபடும் டிரைவர் மற்றும் ஊழியர்களை கைது செய்யாமல், இதில் ஈடுப்படும் பெரும்புள்ளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நெல் குடோன்களில் மற்றும் ரேஷன் கடைகளில் கருப்பாடுகள் உள்ளனர். எங்கு தவறு நடந்தாலும் தகவல் உடனடியாக வருகிறது. தகவல் உண்மையாக இருந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் நெல் பாதிப்பு என்பது அதிக அளவில் இருந்தது. ஆனால் இனிவரும் காலங்களில் பாதிப்பை படிப்படியாக குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Radhakrishnan, Ration Shop, Smuggling