ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்

குடிநீர் வினியோகம் நிறுத்தம்

குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Thanjavur District | பிரதான குடிநீர் குழாய் வால்வு பழுது காரணமாக தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு கொள்ளிடம் ஆறு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து 20 எம்.எல்.டி. நீரும், 137 ஆழ்துளை கிணறுகளிலிருந்து 7.50 எம்.எல்.டி. நீரும் பெறப்பட்டு, 123 எல்.பி.சி.டி. என்ற அளவில் ஒருநாளைக்கு இரண்டு மணிநேரம் வீதம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், பிரதான குடிநீர் குழாயின் வால்வில் பழுது ஏற்பட்டள்ளது இதன் காரணமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் பிரதான குடிநீர் குழாய் வால்வு பழுதடைந்துள்ளதால் சரி செய்யும் பணி நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே தஞ்சை மாநகரில் உள்ள 6-வது வார்டு முதல் 28ஆவது வார்டு வரை இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக் கிழமை), நாளைமறுநாள் (வெள்ளி க்கிழமை) ஆகிய 3 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது.

Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

எனவே, பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்றும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Drinking water, Local News, Thanjavur