ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

மாட்டுவண்டி டயர் தலையில் ஏறியதில் 9ம் வகுப்பு மாணவன் பலி

மாட்டுவண்டி டயர் தலையில் ஏறியதில் 9ம் வகுப்பு மாணவன் பலி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Student dead | தஞ்சையில் மாட்டுவண்டியின் டயர் தலையில் ஏறியதில் 9ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அண்ணல் அக்ரஹாரம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் செழியன். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் ஒரு மகன் உள்ளார். நவீன் அறிஞர் அண்ணா பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில்  மழையின் காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டது. இதனால்  நவீன் (14) உறவினர் மாட்டு வண்டியில் மணல் எடுப்பதற்காக குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றங்கரை சென்றுள்ளார்.

இந்நிலையில் மணல் ஏற்றி கொண்டு திரும்பும் போது கொட்டையூர் அருகே மணல் சறுக்கி நவீன் கீழே விழுந்துள்ளார். அப்போது மாட்டு வண்டியின் டயர் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுவாமிமலை காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also see... பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்... சாலை மறியலில் ஈடுப்பட்ட பொற்றோரால் பரபரப்பு!

மாட்டு வண்டி ஓட்டிய வந்த பாலச்சந்தரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Child, Dead, Local News, Thanjavur