தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, 3 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. மேலும், காவல் உதவி ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டது. காவல் துணை கண்காணிப்பாளர் ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்து. இதனால அங்கே பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரியில் அய்யனார் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக வருவாய்த்துறையினர், காவல்துறையினர் இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டு, கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில், மூன்று வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜீப்பின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது.
இந்த மோதலின்போது, கபிஸ்தலம் உதவி ஆய்வாளர் ராஜ்கமல் காயமடைந்தார். தற்போது பாபநாசம் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவ இடத்திற்கு தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், பாபநாசம் துணைக் காவல் கண்காணிப்பாளர் பூரணி, கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் மற்றும் அதிரடிப்படை, ஆயுதப்படை போலீசார்கள் குவிக்கப்பட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீசார் குவிப்பு
அவர்கள், இரவு முழுவதும் ராஜகிரி கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ராஜகிரி மெயின் ரோட்டில் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.
Must Read : ஆடு திருடிய நபரை காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர்.. வீடியோ வெளியான நிலையில் பணியிடை நீக்கம்
இதனால், தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பாபநாசம் காவல் ஆய்வாளர் அழகம்மாள் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.