Home /News /thanjavur /

தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஏடிஎம் மையத்தில் பெரியகோவில், தலையாட்டி பொம்மை ஓவியங்கள்...

தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஏடிஎம் மையத்தில் பெரியகோவில், தலையாட்டி பொம்மை ஓவியங்கள்...

தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் ஏடிஎம்

தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் ஏடிஎம்

Thanjavur | ஏ.டி.எம். மையத்தில்  பெரியகோவில், தலையாட்டி பொம்மை ஓவியங்கள். தஞ்சையின் பெருமைக்குரிய  அடையாளங்கள் இடம் பிடித்துள்ளதால் பணம் எடுக்க வருபவர்கள் அதனை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சாலை காவேரி நகரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.  இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் வங்கியின் ஏற்பாட்டின் படி தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் 1000ஆண்டை கடந்த பெரிய கோவிலின் ஒவியங்கள், புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மைகள், கலை சிற்பங்கள் ஆகியவை தத்ரூபமாக உள்ளது.

ஏ.டி.எம். மையம் அறை முழுவதும் தஞ்சையின் பெருமைக்குரிய  அடையாளங்கள் இடம் பிடித்துள்ளதால் பணம் எடுக்க வருபவர்கள் அதனை பார்த்து ரசித்து செல்கின்றனர். தஞ்சையின்  அடையாளமான சிற்பங்களை ஏ.டி.எம். அறையிலும் ஓவியமாக உள்ளது வித்தியாசமாகவும், அதே வேளையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

Also see... குழந்தைகளை பாதிக்கும் காய்ச்சல் சென்னையில் அதிகமாக பரவுகிறது...

மேலும் தஞ்சைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் இந்த வங்கி ஏ.டி.எம்.மில் பண பரிவர்த்தனை செய்யும் போது இந்த ஓவியங்கள் மூலம் தஞ்சையின் பெருமைமிக்க அடையாளங்களை தெரிந்து கொள்ள மேலும் வசதியாக உள்ளது.

செய்தியாளர்: எஸ்.குருநாதன், தஞ்சாவூர்
Published by:Vaijayanthi S
First published:

Tags: ATM, Painting, Thanjavur

அடுத்த செய்தி