முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் அண்ணாமலை குறியாக இருக்கிறார்- கே.எஸ்.அழகிரி

ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் அண்ணாமலை குறியாக இருக்கிறார்- கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

K.S.Alagiri : பன்னீர்செல்வமும் - பழனிச்சாமியும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் அண்ணாமலை குறியாக உள்ளார் என தஞ்சாவூரில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி  பேட்டியளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கொரநாட்டு கருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.  அப்போது "கையோடு கைகோர்ப்போம்" என ராகுல் காந்தியின் கருத்துக்களை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன் உள்ளது. ஈரோட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும் வெற்றிபெறுவார். உலக நாடுகளில் ஏற்படும் குழப்பத்திற்கு  மேலாக அதிமுகவில் மாபெரும் குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பத்திற்கு காரணம் பாஜக தான். அவர்களின் சித்தாந்தம் அருகில் இருப்பவர்களின் செயல்பாடுகளை முடக்குவது. இதுபோல் தான் மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி வீழ்த்தியது.

அதேபோல் தமிழகத்திலும் அதிமுகவை ஒன்றுமே இல்லாத அளவிற்கு பாஜக வீழ்த்தி இருக்கிறது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் 2 பேரும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் அண்ணாமலை குறியாக இருக்கிறார். எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்ததுபோல் இடைத்தேர்தலிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். தமிழக இடைத்தேர்தலில் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வரமாட்டார். விவசாயத்திற்கு தமிழக அரசு தனி பட்ஜெட் அறிவித்ததுபோல் தற்போது நிலவும் டெல்டா விவசாயிகளின் கவலைகளையும் கை கொடுப்பார்” என தெரிவித்தார்.

First published:

Tags: Annamalai, BJP, Congress, KS Alagiri, OPS - EPS, Thanjavur