முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / இரட்டை இலை சின்னம் இல்லைன்னா எடப்பாடியால் எதுவும் செய்ய முடியாது - டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் இல்லைன்னா எடப்பாடியால் எதுவும் செய்ய முடியாது - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாது என டிடிவி‌.தினகரன் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்வதற்கு முன் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது.இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் எதுவும் செய்ய இயலாது அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது என்றார்.

மேலும் பேசியவர், நாங்கள் புதிதாக கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்தது போல் எடப்பாடி பழனிசாமியால் சந்திக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். இவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையே கட்சியை விட்டு நீக்கியவர்.  அம்மாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டால் தான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என தெரிவித்தார்.

Also Read:  திண்டுக்கல் சீனிவாசனுக்கு நெஞ்சு வலி... மருத்துவமனையில் அனுமதி

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என்றும் அவரது குடும்பத்திற்கு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு என அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது என தினகரன் தெரிவித்தார். இதனால் நான் திமுக கூட்டணிக்கு செல்வேன் என எதிர்பார்க்காதீர்கள் எனவும் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய்வழங்க வேண்டும் என்றும் குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது மிக மிகக் குறைவு இதனை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தினகரன் தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, Edappadi palanisamy, TTV Dhinakaran