Home /News /thanjavur /

Thanjavur : புடலங்காய்‌, பாகற்காய்களை அதிக அளவில் சாகுபடி செய்யும் சின்னையன் குடிக்காடு விவசாயிகள்..

Thanjavur : புடலங்காய்‌, பாகற்காய்களை அதிக அளவில் சாகுபடி செய்யும் சின்னையன் குடிக்காடு விவசாயிகள்..

தஞ்சை மாவட்டம்

தஞ்சை மாவட்டம்

Thanjavur District: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள சின்னையன் குடிக்காடு எனும் கிராமத்தில் புடலை மற்றும் பாகற்காய் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. பயிர் சாகுபடி, அதில் உள்ள செலவீனம், வருமானம் போன்ற பல தகவல்களை இத்தொகுப்பில் அறியலாம்...

மேலும் படிக்கவும் ...
    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் மருங்குளம் அருகே சின்னையன் குடிக்காடு எனும் கிராமத்தில் புடலங்காய் மற்றும் பாகற்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து அக்கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரிடம் விசாரித்தபோது, “எங்கள் கிராமத்தில் காலம் காலமாக புடலங்காய் மற்றும் ‌பாகற்காய் வகை காய்களே அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டு விதைகள் அதிகளவில் மகசூல் கிடைக்காததால் ஹைப்ரிட் விதைகள் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்,என்று கூறினார் அந்த விவசாயி.
    மேலும் தண்ணீருக்கு எந்த பஞ்சமும் இல்லாததால் எங்களால் காய்கறி சாகுபடியை எளிதாகவும், அதிக அளவிலும் செய்ய முடிகிறது என்று அவர் கூறினார்.

    புடலங்காய், பாகற்காய் சாகுபடி செய்யும் வழிமுறை குறித்து விவசாயி சின்னையன் கூறியதாவது...

    முதலில் நிலப்பரப்பை பதப்படுத்தி விதைகளை நிலத்தில் நட்டு தண்ணீர் மற்றும் இயற்கை உரங்களை தெளிப்பதன் மூலம் 4-வது நாளில் கன்று வளர்ந்து விடும். பிரகு பந்தல்கள் அமைத்து 15வது நாளில் செடிகளை பந்தலுக்கு கீழ் நடவேண்டும்.

    பந்தல் அமைத்து சாகுபடி செய்யும் முறை குறித்து..

    மரங்களை நட்டும் கம்பிகளை வளைத்து கட்டியும் பந்தல் போல் அமைத்தும் பந்தலுக்கு கீழ் ஒவ்வொரு செடியினை தனித்தனியாக வைத்து கம்பியில் சணல் கயிறுகளை கட்டி செடிக்கு நேராகப்படுமாறு தொங்கவிட்டு செடியில் லேசாக முடித்து போடவேண்டும்.
    இதன்மூலம் புடலங்காய் செடியானது சணல் கயிற்றின் மூலம் மேலே பரவி பந்தல் முழுவதுமாக புடலங்காய் கொடியாக உருவாகிறது.

    சின்னையன் குடிக்காடு


    இதன் மூலம் எளிமையான முறையில் எந்த இடையூறும் இல்லாமல் புடலங்காய் காய்த்து தொங்கும்.  பாகற்காய் சாகுபடி செய்வதற்கும் இந்த வழிமுறையைத்தான் கடைப்பிடிக்கிறோம்.

    எவ்வளவு அளவிற்கு விதைகள் பயன்படுத்துகிறீர்கள்?

    ஒரு மாவிற்கு 300 கிராம் விதை பயிரிடப்படுவதாகவும் மூன்று மாவிற்கு அதாவது ஒரு ஏக்கர் நிலத்திற்கு அதிகபட்சமாக ஒரு கிலோ விதைகள் பயிரிடப்படுவதாகவும் அந்த விவசாயி கூறினார்.

    செலவீனம் - வருமானம்...

    புடலங்காய் மற்றும் பாவற்காய் ஆகிய இந்த இரண்டு காய்களையும் விவசாயம் செய்வதற்கு முதல் முறை மட்டும் அதிக செலவு ஆகும்.அதாவது பந்தல் அமைப்பதற்கு கிட்டத்தட்ட 20 லிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை‌ செலவாவதாகவும். இரண்டாம் முறையிலிருந்து சாகுபடி செய்யும் போது ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைப்பதாகவும் கூறினார்.

    புடலங்காய் கொடி


    ஒரு கிலோ புடலங்காய் மற்றும் பாகற்காய் விதையின் விலை 18 லிருந்து 20 ரூபாய் ஆக விற்கப்படுவதாகவும். அறுவடை செய்த பிறகு ஒரு கிலோ புடலங்காயின் தற்போதைய விலையாக 15‌ லிருந்து 20 ரூபாய்க்கு வியாபாரிகளிடம் விற்கப்படுவதாகவும் கூறினார்.

    இந்த வகை சாகுபடியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா?

    பூச்சி மருந்துகளை சரியான நேரத்தில் அடிக்காவிட்டால் பூச்சிகள் காய்களை சேதப்படுத்துவதாகவும் மற்றும் இந்த மருந்துகள் அடிப்பதற்கே செலவுகள் ஆகுவதாகவும், கூறினார்.

    புடலை, பாகற்காய் சாகுபடி.


    இவை சில முறை சரியான விலைக்கு போகாததால், பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை எனவும் சில முறை, நஷ்டங்கள் அடைவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் விவசாயி  சின்னையன் கூறினார்.

    செய்தியாளர் - ஆனந்த், தஞ்சாவூர்
    Published by:Arun
    First published:

    Tags: Agriculture, Farmer, Thanjavur

    அடுத்த செய்தி