அதிமுக சறுக்கிய போதெல்லாம், தூக்கி நிறுத்திய சசிகலா தற்போது சீரழிந்து போவதை தன்னால் பார்க்க முடியவில்லை என அவரது சகோதரர் திவாகரன் கண்ணர் மல்க பேசினார்.
தஞ்சையில் சசிகலா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இணைப்பு விழா சசிகலா மற்றும் திவாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சசிகலாவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது.
பின்பு மேடையில் பேசிய திவாகரன். ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த போது சசிகலாவை ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்தி அமைச்சராக்க நினைத்தார். ஆனால் சசிகலாவோ அதனை அன்புடன் மறுத்தார். ஜெயலலிதாவின் விருப்பதை அப்போதே நிறைவேற்றி இருந்தால் தற்போது இப்படிஒரு நிலை ஏற்பட்டிருக்காது.
அப்படிபட்ட சசிகலாவின் விசுவாசத்தை தற்போது அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் பலர் மறந்து விட்டனர். அவரால் பதவிகளை பிடித்தவர் ஏராளம். எங்கள் வீட்டு கதவை திறந்தவர்களுக்கு கூட பதவி கிடைத்துள்ளது. அவர்கள் எல்லாம் நன்றியை மறந்து விட்டார்கள். இதனால் சசிகலாவின் கரத்தை வலுப்படுத்த அண்ணா திராவிடர் கழகத்தை அ.தி.மு.க.வில் இணைத்துள்ளோம்.
இதையும் படிங்க: நான் இருக்கும்வரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ அழிக்கவோ முடியாது - சசிகலா
சிறு வயதில் இருந்தே சசிகலாவுக்கு எதன் மீதும் ஆசை கிடையாது. அதிமுக சறுக்கிய போதெல்லாம் சசிகலாவும், நடராசனும் தூக்கி பிடித்தார்கள். ஆனால் தற்போது சசிகலா சீரழிந்து போவதை தன்னால் பார்க்க முடியவில்லை என கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனை பார்த்த சசிகலாவும் கண்ணீர் விட்டு அழுதார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, AIADMK, Thanjavur, VK Sasikala