நடிகர் விஜய் தமிழ் சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிய நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகனாக திகழ்கிறார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் பரந்து விரிந்துள்ளனர். நடிகர் விஜயின் ஒவ்வொரு பிறந்த நாளையும் அவரின் ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.
கடந்த 2009 ஜூலை மாதம் நடிகர் விஜய், விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். இதனைத் தொடர்ந்து இவரது ஒவ்வொரு பிறந்த நாளிலும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் பல சிறப்பான நிகழ்வுகளை நடத்துவார்கள்.
தஞ்சையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..
அந்த வகையில், தஞ்சையில் மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நிறைய நல்ல நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.மார்ட்டின் கூறியதாவது:
அனைத்து தரப்பு மக்களின் இதயங்களை கவர்ந்தவர் விஜய். அவரது பிறந்தநாளை நாங்கள் குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறோம்.
இந்த நிலையில் விஜயின் புதிய படத்துக்கு ‘வாரிசு’ என்று டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் நாங்கள் இருபெரும் விழாவாக கொண்டாடி வருகிறோம்.
மேலும், அவர் நடிப்போடு மட்டுமில்லாமல் ஏழை மக்களுக்கு உதவிகளை செய்வது, மாணவ மாணவிகளுக்கு படிப்பதற்கு தேவையான உதவிகளை செய்வது என்று அவரது சேவை மனப்பான்மை பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இதனை தொடர்ந்து நாங்களும் தளபதி விஜய் வழியில் தஞ்சையில் பல்வேறு உதவிகளை மேற்கொண்டோம்.
அதிகாலையில் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நடிகர் விஜய்க்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தஞ்சையில் இருக்கும் அன்பு இல்லத்தில் ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் 55 பேருக்கு காலை உணவு வழங்கினோம்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நடிகர் விஜய்க்கு சிறப்பு வழிபாடு
பிறகு, தஞ்சை மேல வஸ்தா சாவடி எனும் பகுதியில், உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு அகராதிகளையும் (Dictionary), ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கியதாகவும் கூறினார்.

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்..
இதனை தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் அறிவுறுதலின் படி 86ஆயிரம் ரூபாய் செலவில் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தி அதற்கு இன்று பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றதாகவும் கூறினார்.

கழிப்பறை திறப்பு..
மேலும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் சாலையோரங்களில் இருப்பவர்களுக்கும் பிரியாணி சமைத்து 150 பேருக்கு வழங்கப்பட்டது எனவும் மேலும் காலை உணவு வழங்கி அன்பு இல்லத்திற்கு இரவு உணவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு..
மேலும் தஞ்சை கீழவாசல் பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும் இளைஞரணி செயலாளர் பி மார்ட்டின் கூறினார்.

விஜய் மக்கள் இயக்கத்தினர்..
இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியானது விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
அறிவுறுத்தலின்படி தஞ்சை மாவட்ட விஜய் இளைஞரணி தலைவர் ரமேஷ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் மார்டின் மற்றும் ஒன்றியம்,நகரம் அனைத்து நிர்வாகிகளுடன் இந்த நிகழ்ச்சியானது மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. என கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
செய்தியாளர் - ஆனந்த், தஞ்சாவூர்
உங்கள் நகரத்திலிருந்து(Thanjavur)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.