Home /News /thanjavur /

மீன் வியாபாரியிடம் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்டவர் கொலை - தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

மீன் வியாபாரியிடம் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்டவர் கொலை - தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

கொலை செய்யப்பட்டவர்

கொலை செய்யப்பட்டவர்

தஞ்சாவூர் அருகே மீன் வியாபாரியிடம் தகராறு செய்தவர்களை, தட்டிக்கேட்ட இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சாவூர் அருகே பள்ளிய அக்ரஹாரம் சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (33). இவர் பிள்ளையார்பட்டியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பிரேம்குமார் நேற்று பள்ளிய அக்ரஹாரம் புறவழிச்சாலையில்  உள்ள மதுபான கடை அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பள்ளிய அக்ரஹாரம் கடை வீதியில் பிரேம்குமார் நின்றுக்கொண்டிருந்த  போது அங்கு மீன் வியாபாரம் செய்துக்கொண்டிருந்த, ரெங்கன் என்பவரிடம், விஸ்வபிரசாத் என்பவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த பிரேம்குமார், விஸ்வபிரசாத்தை திட்டியுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாலை பள்ளிய அக்ரஹாரம் புறவழிச்சாலையில் உள்ள மதுபான கடையில், விஸ்வபிராசத் மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் (36) இருவரும் மது அருந்திக் கொண்டிருந்துள்னர். அப்போது அவ்வழியாக சென்றுக்கொண்டிருந்த பிரேம்குமாரை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரேம்குமாரை இருவரும் சாரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

ALSO READ | வர்ம முறையில் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது! செருப்பு கடை நடத்தியவர் மருத்துவரா?

இந்நிலையில் பிரேம்குமாரின் உறவினர்கள் - பொதுமக்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, தஞ்சை - கும்பகோணம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். தகவலிறிந்த டவுன் டி.எஸ்.பி., ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை விரைந்து கைது செய்வதாக கூறி, சமாதனம் செய்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மீன் வியாபாரியிடம் தகராறு செய்தவர்களை, தட்டிக்கேட்ட இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Anupriyam K
First published:

Tags: Murder, Tanjore

அடுத்த செய்தி