ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

தஞ்சையில் 2 வாலிபர்களை அரிவாளால் வெட்டிய‌ 85 வயது முதியவர் கைது

தஞ்சையில் 2 வாலிபர்களை அரிவாளால் வெட்டிய‌ 85 வயது முதியவர் கைது

இளைஞர்களை அரிவாளால் வெட்டிய முதியவர்

இளைஞர்களை அரிவாளால் வெட்டிய முதியவர்

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரும்பூர் அருகே 85 வயது முதியவர் இரு இளைஞர்களை அரிவாளால் வெட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை அருகே உள்ள கள்ளப்பெரும்பூர் வடக்கு வளவு பகுதியை சேர்ந்த‌வர் துரைமாணிக்கம் (வயது 85).  இவருடைய வீட்டின் அருகே சாலை போடும் வேலை நடைபெற்று வருகிறது. அதில்  திருவையாறு பகுதியை  சேர்ந்த பிரபாகரன் (20),  மணிஷ் ( 21) ஆகியோர் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து  துரைமாணிக்கம் வீட்டின் அருகே சாலை போடும்போது பிரபாகரன் , மணிஷ் ஆகியோருடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த துரைமாணிக்கம் அரிவாளால் பிரபாகரன், மணிஷ் ஆகிய இருவரையும் வெட்டியுள்ளார். இந்த  காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.  இதில் காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Also see... சத்தீஸ்கரில் காணாமல் போன 3 சிறுமிகள் கரூர் செங்கல் சூளையில் மீட்பு.. ஷாக் சம்பவம்!

இதுகுறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் காவல்துறையினர் முதியவர் துரை மாணிக்கம் மீது வழக்கு பதிவு செய்து அவரை  கைது செய்தனர். இந்நிலையில்  முதியவர்‌ துரைமாணிக்கத்தை  தஞ்சை  நீதிமன்றத்தில்  நீதிபதி முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்திய நிலையில் நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கினார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Attacked, Crime News, Thanjavur