Home /News /thanjavur /

தங்கை திருமணத்தின்போது வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை.. நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

தங்கை திருமணத்தின்போது வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை.. நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

6 பேர் சரண்

6 பேர் சரண்

Thanjavur | அரியலூர் மாவட்டம் டி.பலூரில் வழக்கறிஞர் சாமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் தஞ்சை மாவட்டம்  திருவையாறு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (32). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, இவரது தங்கையின் திருமணம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் கடந்த புதன்கிழமை செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. திருமணம் முடிந்த நிலையில், வழக்கறிஞர் சாமிநாதன் மண்டபத்திற்கு எதிரே உள்ள கடையில் நின்றுகொண்டு தேனீர் குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், திடீரென தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாளை எடுத்து சாமிநாதனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சாமிநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையிலான போலீஸார், சாமிநாதனின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள திருப்பந்துறை கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு செல்வமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் சாமிநாதனுக்கு தொடர்பு இருப்பதாக அப்போது தகவல்கள் பரவின. எனவே அதுதொடர்பான முன்விரோததத்தின் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று, திருநாரையூர் அய்யம்பாலாய தெருவை சேர்ந்த குருமூர்த்தி(21), நாச்சியார் கோவில் மேல தெருவை சேர்ந்த  தினேஷ்குமா(23), கும்பகோணம் ஐயம்பிள்ளை தெருவை சேர்ந்த கரன்(33), கும்பகோணம் உள்ளிக்கான் சந்து சேர்ந்த தமீம் அன்சாரி(35), நாச்சியார் கோவில் திருநறையூர் ராமநாதன் நகரை சேர்ந்த விஜய்(20), நாச்சியார் கோவில் ராமநாதன் நகரை சேர்ந்த தினேஷ்குமார் (27) ஆகியோர் திருவையாறு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹரிராம் முன்பு சரணடைந்தார்கள்.

Also see... திமுக எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் பேசுவதாக எடப்பாடி பழனிச்சாமி காமெடி செய்கிறார் : முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி

இவர்களை விசாரித்த நீதிபதி  வருகின்ற 13ஆம் தேதி வரை புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்களது கையில் விளங்கிட்டு டெம்போ வேனில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Murder case, Thanjavur

அடுத்த செய்தி