தஞ்சையில் நகைக்கடைக்காரரிடம் இருந்து 5 கிலோ தங்கம், 14 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற வெள்ளைச் சட்டைக் கும்பலில் இருவர் சிக்கியுள்னர். 3 மாநிலங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் குற்றவாளிகள் சிக்கியது எப்படி?
8 தனிப்படைகள் அமைத்து ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என 3 மாநிலங்களில் தேடுதல் வேட்டையாடிய போலீசார் வெள்ளைச் சட்டைக் கும்பலில் இருவரைப் பிடித்துள்ளனர். தஞ்சையில் கொள்ளையடித்து விட்டு வெளிமாநிலங்களில் பதுங்கிய கொள்ளைக் கும்பல் சிக்கியது எப்படி?
சென்னையைச் சேர்ந்த மணி என்ற நகை வியாபாரி, 10 கிலோ தங்கநகைகளுடன் கடந்த ஜுன் ஒன்றாம் தேதி கும்பகோணத்திற்குச் சென்றார். விற்பனையை முடித்துவிட்டு, தங்க நகைகளுடன் இரவு 8 மணி வாக்கில் பேருந்தில் தஞ்சையை மணி சென்றடைந்தார்.
தனது வாடிக்கையாளர்களுக்கு பாதி நகைகளைக் கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தை பெற்றுக் கொண்ட அவர், தஞ்சை பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு அருந்துவதற்காக சென்றுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்போது உணவு வாங்குவதற்காக அவரது நகை பையை கீழே வைத்துள்ளார். உணவு அருந்திவிட்டு, மீண்டும் பையை தேடிய போது நகை பையை காணவில்லை. பதறிய மணி, உடனடியாக ஹோட்டல் மேலாளரிடம் இதுகுறித்து தெரிவிக்க, பையுடன் இருவர் வெளியே சென்றதாக அவர் கூறியுள்ளார்
உடனே ஹோட்டல் மேலாளரும், மணியும் வெளியே சென்று அந்த நபர்களை கண்டறிய முயன்றனர். ஆனால் அவர்கள் கண்ணிமைக்கும் வேகத்தில் மறைந்தனர்.
5 கிலோ தங்கம், 14 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்த புகாரில், தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணையை தொடங்கினர்.
கொள்ளை அரங்கேற்றப்பட்ட இடங்களைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிக்களை ஆய்வு செய்ததில், கொள்ளைக்கும்பல் தப்பிச் சென்ற காட்சிகள் கிடைத்தன.
ஒவ்வொரு நகை கடைக்கும் மணி சென்றபோது அவரை ஒரே நிறத்தில் சட்டை அணிந்திருந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல் பின்தொடர்ந்துச் சென்றுள்ளனர்.
மேலும் உணவகத்திலும் அவரை திசை திருப்பும் நோக்கில் அவரை சுற்றி ஒன்பது பேரும் நின்றிருப்பதும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.
திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றிய கும்பலைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
கொள்ளைக் கும்பல் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் எனத் கிடைத்த தகவலின் பேரில் ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 3 வாரங்களாக போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான தானாஜி பாபு சுக்ளி, 45 வயதான பாண்டுரங் பாபு துகில் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொள்ளையில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். சிக்கியவர்களிடமிருந்து நகை பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
உங்கள் நகரத்திலிருந்து(Thanjavur)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.