ஃபேஸ்புக் மூலம் பழகிய 25 வயது வாலிபரை ஒரத்தநாட்டை சேர்ந்த 40 வயதுடைய பெண், 2வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு திருமணமாகி 22 மற்றும் 21 வயதில் இரு மகன்கள் உள்ளனர். மனைவிக்கு 40 வயது. கணவர் வேலைக்காக சிங்கப்பூர் சென்று, சில ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மகன்களின் படிப்பிற்காக பெண்மணி, ஒரத்தநாடு டவுன் பகுதியில் வீடு வாடகைக்கு பிடித்து தன் மகன்களுடன் தங்கியுள்ளார்.
அந்த பெண்ணின் ஒரு மகன் பொறியியல் படித்து முடித்து விட்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மகன்கள் இருவரும் வேலை, படிப்பிற்காக பகல் பொழுது முழுவதும் வீட்டை விட்டு வெளியில் சென்று விடுவதால் வீட்டில் தனியாக இருந்த அந்த பெண் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிட்டு வந்தார்.
ஃபேஸ்புக்கில் மலர்ந்த கள்ளக்காதல்:
அப்போது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கவர்ச்சி படங்கள் அனுப்பும் அளவிற்கு இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அந்த நெருக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அப்போது அந்த வாலிபர், “இன்னும் எத்தனை நாட்கள் தான் நாம் ஃபேஸ்புக் மூலம் பேசிக்கொள்வது. உன்னை உடனடியாக நான் சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.”
அதற்கு அந்த பெண் சம்மதித்ததை அடுத்து, அந்த வாலிபர் தனது சொந்த ஊரான கடலூரில் இருந்து இந்த பெண்ணை பார்ப்பதற்காகவே ஒரத்தநாடு பகுதிக்கு இடம் மாறியுள்ளார். அங்கு வாடகைக்கு ஆட்டோ ஒன்றை எடுத்து ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். ஆட்டோ ஓட்டிய நேரம் போக மற்ற நேரங்களில் அந்த பெண்ணை யாருக்கும் தெரியாமல் சந்திப்பதையே வழக்கமாக வைத்துள்ளார்.
இதையும் வாசிக்க: காலின் உள்ளே சிக்கிய கற்களை அகற்றாமல் தையல் போட்ட அரசு மருத்துவமனை ஊழியர்.. நோயாளி வேதனை
கணவர் வெளிநாட்டில் இருப்பதாலும், இரு மகன்கள் பகல் நேரங்களில் வீட்டில் இல்லாததாலும், யாருக்கும் தெரியாமல் அந்த வாலிபருடன் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று தனிமையில் இருந்துள்ளார்.
கள்ளக்காதலனுடன் ஓட்டம்:
இதன் காரணமாக அந்த பெண் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். குழந்தை இருப்பதை மறைக்க முடியாது என தெரிந்த அந்த பெண் தனது கள்ளக்காதலனுடன் சென்று குடும்பம் நடத்த முடிவு செய்தார். இதன்பின்னர் அவர் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு கடந்த 12ஆம் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார்.
பின்னர் கடலூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கள்ளக்காதலனை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் காலையில் எழுந்த அந்த பெண்ணின் மகன்கள் வீட்டில் தனது தாயாரை காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் வெளிநாட்டில் உள்ள தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஒரத்தநாடு காவல்நிலையத்தில், தாயார் வீட்டில் இருந்து காணாமல் போனதாகவும், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தையும் காணவில்லை எனவும் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவனுக்கு அனுப்பிய போட்டோ:
இதற்கிடையில் திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை வெளிநாட்டில் உள்ள தனது முதல் கணவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளதார். அதுமட்டுமின்றி, தான் கடலூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது தான் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், அவருடன் குடும்பம் நடத்த உள்ளதாகவும் ஆடியோ பதிவு ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளார். இதனை கண்ட அந்த பெண்ணின் கணவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Extramarital affair, Facebook, Orathanadu