ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

திருக்குறள் முதல் கம்பராமாயணம் வரை.. பழங்கால தமிழ் நூல்களை மனப்பாடமாக சொல்லும் 4 வயது சிறுவன்..

திருக்குறள் முதல் கம்பராமாயணம் வரை.. பழங்கால தமிழ் நூல்களை மனப்பாடமாக சொல்லும் 4 வயது சிறுவன்..

சிறுவன் திருசாகித்தியனும் அவரின் குடும்பத்தாரும்

சிறுவன் திருசாகித்தியனும் அவரின் குடும்பத்தாரும்

ஆத்திச்சுடி, கம்பராமாயணம், தேம்பாவணி, பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட 66 பழங்கால நூல்களையும், அதனை இயற்றிய ஆசிரியர்களின் பெயர்களையும்  52 விநாடியில் கடகடவென கூறுகிறார் இந்த சிறுவன்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சையில் தமிழில்  அசத்தும் 4 வயது சிறுவன்,  பெரியபுராணம், மணிமேகலை, திருவாசகம் உள்ளிட்ட  66  பழங்கால  நூல்களின் பெயர்களையும் - அவற்றை எழுதிய நூலாசிரியர்களின் பெயர்களையும்,  திருக்குறளையும் கட கடவென்று  ஒப்பிக்கும்  எல்.கே.ஜி படிக்கும் 4 வயது  சிறுவன்.

தஞ்சை சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த பொறியாளர் ஆனந்தபாபு. இவருக்கு ரேகா என்ற மனைவியும் திருசாகித்தியன் என்ற 4 வயது மகனும் உள்ளனர். பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் எனத்துவங்கும் விநாயகர் துதி பாடல் முதல், ஆத்திச்சுடி, கம்பராமாயணம், தேம்பாவணி, பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட 66 பழங்கால நூல்களையும், அதனை இயற்றிய ஆசிரியர்களின் பெயர்களையும்  52 விநாடியில் கடகடவென கூறுகிறார் இந்த சிறுவன்.

இதையும் படிக்க :  குச்சிப்புடி நடனமாடிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்-கின் மகள்..!

அதுமட்டுமில்லாமல், 85 திருக்குறளையும், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் பிழை இல்லாமல் தெள்ளத்தெளிவாக கூறி அசத்துகிறான் இந்த சிறுவன். தமிழ் மேல் பற்று கொண்ட பெற்றோர், திருசாகித்தியன்  ஒன்றரை வயது குழந்தையாக இருக்கும் போதே  ஏ பார் ஆப்பிள் என்று சொல்லிக்கொடுக்காமல், அகர முதல என்று துவங்கும் திருக்குறளை சொல்லி கற்றுத் தந்ததாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

இப்படியே காலையில் எழுந்ததும் தினம் ஒரு குறள் என 85 குறள்களை சிறுவன் மனப்பாடம் செய்துள்ளான் என்றும், தமிழ் மீது கொண்ட பற்றால்  சிறுவனுக்கு குழந்தை பருவத்திலிருந்தே தமிழை பயிற்றுவிப்பதாகவும், தமிழை மையப்படுத்தி சாதனை செய்ய வைப்பதே தங்களது இலக்கு என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Boy, Literature, Local News, Tamil, Thanjavur