Home /News /thanjavur /

புஷ்பா பட பாணியில் லாரியில் ரகசிய அறை வைத்து 700 கிலோ கஞ்சா கடத்தல்... தஞ்சையில் 3 பேர் கைது

புஷ்பா பட பாணியில் லாரியில் ரகசிய அறை வைத்து 700 கிலோ கஞ்சா கடத்தல்... தஞ்சையில் 3 பேர் கைது

கஞ்சா கடத்தல்

கஞ்சா கடத்தல்

Thanjavur | தஞ்சை மாவட்டத்தில் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 700 கிலோ கஞ்சாவை போலீசார் பிடித்துள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தமிழகத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த தமிழக காவல் துறை ஆபரேஷன் கஞ்சா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது . இதன் மூலமாக தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நூற்றிற்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்துள்ளது காவல் துறை.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா எடுத்துவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார் எழுந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து ஆந்திர கஞ்சா கும்பலை தேடி வந்தனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பின்னவாசல் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆனால் லாரியில் எந்த பொருளும் இல்லை. எனினும், சந்தேமடைந்த போலீசார் லாரியை முழுமையாக சோதனை மேற்கொண்ட போது லாரியின் பின்னால் சில ரகசிய அறை இருப்பதை கண்டுப்பிடித்தனர்.

அதை உடைத்து பார்த்த போது மூட்டை மூட்டையாக 700 கிலோ வரை கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர். இதனை அடுத்து லாரியில் இருந்த மதுரையை சேர்ந்த ரமேஷ்குமார், தேனியை சேர்ந்த படையப்பா, பின்னவாசல் பகுதியை சேர்ந்த சிதம்பரம் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.



அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுமார் 1.5 கோடி மதிப்புள்ள கஞ்சாவை இந்த கும்பல் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

Also see... காரைக்காலில் சிறுமி மீது நண்டை விட்டு பாலியல் சீண்டல்: வாலிபர் போக்சோவில் கைது...

இந்த கும்பலில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது, கடத்தல் கும்பலின் பின்னணி என்ன என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Andhra Pradesh, Arrested, Cannabis, Crime News, Thanjavur

அடுத்த செய்தி