Home /News /thanjavur /

தஞ்சையில் சாலையில் இருந்த பைக்கை தூக்கி சென்ற காவலர்கள்.. பாதுகாப்பாக எடுத்து வைத்ததாக தகவல்..!

தஞ்சையில் சாலையில் இருந்த பைக்கை தூக்கி சென்ற காவலர்கள்.. பாதுகாப்பாக எடுத்து வைத்ததாக தகவல்..!

மாதிரி படம்

மாதிரி படம்

காவல்துறையின் கடமைக்கு அளவே இல்லையா ??..., பேராவூரணி காவல்துறையின் நூதன சம்பவம். அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை எடுத்து சென்ற இரண்டு காவலர்கள், பாதுகாப்பாக எடுத்து வைத்ததாக தெரிவித்துள்ளனர். 

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஊமத்தநாடு பகுதியை சேர்ந்தவர் நிரேஷ் (26). இவர் கடந்த 3ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தை செங்கொல்லை பகுதியில் உள்ள தனது உறவினரான மாமா வீட்டில் நிறுத்திவிட்டு, தனது காரை எடுத்துக்கொண்டு சென்று உள்ளார்.  இந்நிலையில் மீண்டும் நள்ளிரவு ஒரு மணி அளவில் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நிரேஷ் இருசக்கர வாகனம் காணவில்லை என பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தபோது இரண்டு காவலர்கள் காவல் உடையில் வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து காவல்துறையிடம் முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் மூலம் காவல் நிலையத்தில் அழுத்தம் கொடுத்த பிறகு தங்களுடைய இருசக்கர வாகனம் காவல் நிலையத்தில் உள்ளதாகவும், வந்து எடுத்துச் செல்லுங்கள் என காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனை அடுத்து கடந்த 8ஆம் தேதி காவல் நிலையத்திற்கு சென்ற நிரேஷ் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து வந்துள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தில் அவர் பயன்படுத்தாத பவுடர், சீப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் இருந்துள்ளதாகவும், அவர் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த பவர் பேங்க் மற்றும் டேப் ஆகியவற்றை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார், இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது சாலையில், யாரும் இன்றி இருசக்கர வாகனம் தனியாக இருந்ததாகவும், எனவே தங்களின் பாதுகாப்புக்காகவே இரு சக்கரத்தை பாதுகாப்பாக எடுத்து வந்து காவல் நிலையத்தில் வைத்திருந்ததாகவும், வாகனத்தை எடுத்து வந்த காவலர் தெரிவித்துள்ளார்.

    மேலும் நிரேஷிடம் இது தொடர்பாக எழுதி வாங்கிக்கொண்டு புகாரையும் திரும்ப பெற செய்துவிட்டனர். இந்த சம்பவம் தற்போது பேராவூரணியில் பேச்சு பொருளாக உள்ளது, ஒருவேளை பாதுகாப்பாக எடுத்து வந்திருந்தால், அங்கு சுமார் பத்துக்கும் மேற்பட்ட வண்டிகள் இருந்துள்ளது. ஆனால் நிரேஷ் வண்டியை மட்டும் எடுத்து ஏன் ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    செய்தியாளர்: குருநாதன், தஞ்சாவூர்
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Bike Theft, Crime News, Tanjore

    அடுத்த செய்தி