Home /News /thanjavur /

தஞ்சையில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 109 கடைகளுக்கு சீல்!

தஞ்சையில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 109 கடைகளுக்கு சீல்!

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சை மாவட்ட ஆட்சியர்

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சை மாவட்ட ஆட்சியர்

தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 109 கடைகள் தஞ்சை மாவட்டத்தில் இன்று பூட்டி சீல் வைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 109 கடைகள்  இன்று பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் புகையிலை மற்றும் போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நடைறெ்ற இந்த ஆய்வில் மொத்தம் 109 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதேபோல் தஞ்சாவூர் வடக்கு வீதி பகுதியில் உள்ள இரண்டு கடைகளுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சீல் வைத்தார், தொடர்ந்து தடையை மீறி புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Published by:Raj Kumar
First published:

Tags: Drug addiction, Police, Thanjavur

அடுத்த செய்தி