ஹோம் /நியூஸ் /தென்காசி /

குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட குழந்தை.. பதைபதைக்கும் காட்சி!

குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட குழந்தை.. பதைபதைக்கும் காட்சி!

நீரில் அடித்து செல்லப்பட்ட குழந்தை மீட்பு

நீரில் அடித்து செல்லப்பட்ட குழந்தை மீட்பு

Tenkasi courtallam | குற்றாலத்தில் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், குழந்தையை நீர் அடித்து சென்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

பழைய குற்றால அருவியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை சக சுற்றுலாப் பயணிகள் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.

அந்த வகையில், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் குடும்பத்தினர் குளிப்பதற்காக பழைய குற்றாலம் வந்துள்ளனர். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர்களின் 4 வயது பெண் குழந்தை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பலரும் துடிதுடித்தனர். இந்த நிலையில் அங்கிருந்த இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக கீழே இறங்கி தண்ணீரில் அடித்துச் சென்று கொண்டிருந்த குழந்தைக்கு சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தார். தற்போது அந்த குழந்தை தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்கிறது.

செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி.

First published:

Tags: Courtallam, Local News, Tenkasi, Viral Video