ஹோம் /நியூஸ் /தென்காசி /

தென்காசி மாவட்டம் வாகைகுளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு... காரணம் என்ன?

தென்காசி மாவட்டம் வாகைகுளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு... காரணம் என்ன?

பறவைகள்

பறவைகள்

பறவைகள் ஆண்டுதோறும் வருவது வந்து செல்லட்டும் அதற்க்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ஆனால் இதற்க்கு மாறாக மாவட்டம் நிர்வாகம் சார்பில் பறவைகள் சரணாலயம்  மட்டும் அமைக்க கூடாது எனவும் தெரிவிக்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தமிழகத்தில் 13க்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.  நீர்நிலைகளில் உள்ள பறவைகளைப் பாதுகாக்க பறவைகள் அதிகம் தங்கும் பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக தமிழக அரசு அறிவித்து பாதுகாத்து வருகின்றது.

  ஒவ்வொரு வருடமும் செப்டம்பர்- அக்டோபர் நவம்பர் மாதங்களில் பறவைகள் சரணாலயங்கள் பகுதிக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து பறவைகள் வந்து மீண்டும் ஏப்ரல் - மே மாதங்களில் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்புகின்றன.

  பூநாரைகள், பவளக்காலிகள். நெட்டை காலிகள், பட்டைத் தலை வாத்துக்கள், மீன்கொத்திகள், கொக்குகள் என பலவிதமான பறவை இனங்கள் கடனா, சைபீரியா, ஆஸ்திரேலியா, பர்மா உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வருகை புரியும்.

  இந்நிலையில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள இயற்கை எழில்சூழ் கொண்ட கிராமம் வாகைகுளம். இந்த கிராமத்தில் 480 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெறக்கூடிய வாகைகுளத்தில் வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் வந்து இன விருத்தி செய்த பின்னர் ஜனவரி, பிப்ரவரி, மே மாதங்களில் திரும்பி செல்லும். அப்போது 10 வகையான 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

  இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் திடீரென வாகைகுளம் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் ஆழ்வார்குறிச்சி சமுதாய நலக்கூடத்தில் வைத்து அரசு அதிகாரிகளுடன் கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடைபெற்றது. அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கிராம மக்கள் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  இது குறித்து கிராம மக்கள் கூறும்போது,  இந்தக் குளத்தின் மூலம் சுமார் 480 ஏக்கர் விளை நிலங்கள் சாகுபடி செய்யக்கூடிய சூழ்நிலையில் தற்போது பறவைகள் சரணாலயம் அமைத்தால் எங்களால் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும். மேலும் குளத்தில் குடிநீர் எடுக்க, குளிக்க கூட முடியாத நிலை ஏற்படும்.  மே, ஜூன், ஜூலை மாதங்களில் குளத்தில் உள்ள நீர் வற்றிய நிலையில் வண்டல் மண் கூட எடுத்து விவசாய நிலங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் கூறினர்.

  எனவே பறவைகள் ஆண்டுதோறும் வருவது வந்து செல்லட்டும் அதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ஆனால் இதற்கு மாறாக மாவட்டம் நிர்வாகம் சார்பில் பறவைகள் சரணாலயம்  மட்டும் அமைக்க கூடாது எனவும் தெரிவிக்கின்றனர்.

  Read More: PFI தடை எதிரொலி : பதற்றத்தை தனிக்க சென்னை முழுவதும் 4 ஆயிரம் போலீசார் குவிப்பு!..

  அதேவேளையில், சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். இந்த கிராமத்திற்கு அருகேயுள்ள  ரவணசமுத்திரத்தை சேர்ந்த முஹமது சலீம், புகாரி ஹாசிப் ஆகியோர் கூறும் போது,  பறவைகள் சரணாலயம் அமைத்தால் எங்கள் பகுதி மென்மேலும் வளர்ச்சியடையும் எனவும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இதனால் சிறு வியாபாரம் மற்றும் சிறு தொழில்கள் மேம்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

  செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி மாவட்டம்

  Published by:Srilekha A
  First published:

  Tags: Bird Sanctuary, Birds, Tenkasi