முகப்பு /செய்தி /தென்காசி / குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம்; 2 பெண்கள் அடித்து செல்லப்பட்டு உயரிழப்பு

குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம்; 2 பெண்கள் அடித்து செல்லப்பட்டு உயரிழப்பு

குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம்.

குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம்.

Courtallam Falls Flood | குற்றால மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அருவியில் குளித்து இருந்த இரண்டு பெண்கள் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட மேலும் இரண்டு பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Courtalam (Courtallam), India

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும். இந்த சீசனை அனுபவிப்பதற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்த காரணமாக பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து வரத் துவங்கியது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.

இந்த நிலையில் இன்று மாலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவியில் திடீர்ரென தண்ணீர் பாதுகாப்பு வளைவை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அருவியில் குளித்துக்கொண்டிருந்த பண்ருட்டியை சேர்ந்த கலாவதி (55) சென்னையைச் சேர்ந்த மல்லிகா (35) ஆகிய இருவரும் அடித்து செல்லப்பட்டனர்.

இவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மேலும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு முகாமிட்டு உள்ளனர். இதே போல் ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தடை விதித்துள்ளனர்.

First published:

Tags: Courtallam, Falls, Flood