Home /News /tenkasi /

குற்றால அருவி: இரவு முழுவதும் ஜொலிக்கும் மின் ஒளியால் அருவியில் ஆனந்தமாய் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

kutralam Falls | குற்றால அருவிகளில் இரவு முழுவதும் ஜொலிக்கும் மின் ஒளியால் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாய் குளித்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குற்றால அருவிகள் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். இந்த சீசனை அனுபவிப்பதற்கு உலகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்ததின் காரணமாக பிரதான அருவியான குற்றாலம் மெயின், அருவி ஐந்தருவி, புலியருவி சிற்றருவி, பழைய குற்றால அருவிகளில் நீர் வரத்து துவங்கியதால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    தற்போது சீசன் களைகட்டி உள்ள நிலையில் 24 மணி நேரமும் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து பிரதான அருவியான குற்றால மெயின் அருவியில் மின்னொளி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அருவிகளிலும் இரவு முழுவதும் ஆனந்தமாய் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    Also see...விவாகரத்து மூலம் பிரிந்த தம்பதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கூறிய அட்வைஸ்

    இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, “ நயாகரா வீழ்ச்சியை போல கண்ணுக்கு விருந்தாகவும் குளிப்பதற்கு மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் தெரிவித்தனர். அவ்வப்போது ஜில்லென்று இதமான காற்றும், சாரல் மழையும் பெய்வதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்தனர்.

    செய்தியாளர்: ச.செந்தில்,தென்காசி 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Falls, Tenkasi

    அடுத்த செய்தி