ஹோம் /நியூஸ் /தென்காசி /

இன்று கார்த்திகை சோமவாரம்! குற்றால அருவியில் வழிபாடு செய்ய குவிந்த பெண்கள்!

இன்று கார்த்திகை சோமவாரம்! குற்றால அருவியில் வழிபாடு செய்ய குவிந்த பெண்கள்!

கார்த்திகை கோமவாரம் - குற்றாலம்

கார்த்திகை கோமவாரம் - குற்றாலம்

Karthikai Somavaram 2022 | கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் கணவன் நீண்ட ஆயுள் பெற வேண்டி குற்றால அருவியில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவியில் ஆயிரக்கணக்கான பெண்கள் இன்று புனித நீராடினர். கார்த்திகை மாதம் இரண்டாம் திங்கட்கிழமையான சோமவாரத்தை முன்னிட்டு கணவன் நீண்ட ஆயுள் பெற வேண்டியும் குடும்பத்தில் அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் பெண்கள் பழம் மஞ்சள், படையல் வைத்து வழிபாடு செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக அருவியில் குளிக்க அனுமதிக்கபடாத நிலையில் இந்த ஆண்டு தொற்று குறைந்ததை தொடர்ந்த அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாலையில் வந்து அருவியில் புனித நீராடினர்.

பின்னர் அருகில் உள்ள குற்றாலநாதர் ஆலயம் சென்று விநாயகர் கோவிலில் சுற்றி வந்து நாகராஜாவுக்கு பழம், மஞ்சள், படையல் வைத்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.

இது குறித்து பெண்கள் கூறும் போது,” கார்த்திகை மாதத்தின் இரண்டாம் திங்கள் கிழமை சோமவாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் வழிபடு நடத்துவது கணவன் நீண்ட ஆயுள் பெற வேண்டும். குடும்பம் வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காகதான். இதனால் எங்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருப்பதாக  தெரிவித்தனர்.

Also see... சகல தோஷங்களை போக்கும் சங்காபிஷேகம்... பூஜை செய்வது எப்படி? - ஓர் ஆன்மிக வழிகாட்டல்!

இதனால் பிரதான அருவியான குற்றால அருவியில் அதிகாலையில் இருந்து ஆண்கள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி

First published:

Tags: Courtallam, Karthigai Deepam