ஹோம் /நியூஸ் /தென்காசி /

உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய இளைஞர்.. நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர்..

உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பாற்றிய இளைஞர்.. நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர்..

குழந்தையை காப்பாற்றிய இளைஞர்

குழந்தையை காப்பாற்றிய இளைஞர்

விஜயகுமாரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பாராட்டியதுடன் சான்றளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India

ஹீரோக்கள் திரையில் மட்டுமல்ல. நிஜத்திலும் இருப்பார்கள், அவர்களை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமாகும். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.

அந்த வகையில், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் குடும்பத்தினர் குளிப்பதற்காக பழைய குற்றாலம் வந்துள்ளனர். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர்களின் 4 வயது பெண் குழந்தை தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்டு 40 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பலரும் துடிதுடித்தனர். இந்த நிலையில் அங்கிருந்த இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக கீழே இறங்கி தண்ணீரில் அடித்துச் சென்று கொண்டிருந்த குழந்தைக்கு சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தார். தற்போது அந்த குழந்தை தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்கிறது.

இது தொடர்பான காட்சிகள் வேகமாக பரவி விஜயகுமாருக்கு பாராட்டுகள் குவிந்து வந்த நிலையில், விரைந்து செயல்பட்ட விஜயகுமாரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பாராட்டியதுடன் சான்றளித்தார்.

First published:

Tags: District collectors, Falls, Girl Child