Home /News /tenkasi /

சிறுவர்களிடம் தீண்டாமை காட்டிய கடைக்காரர்.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

சிறுவர்களிடம் தீண்டாமை காட்டிய கடைக்காரர்.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ

இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ

பாஞ்சாங்குளத்தில் கிராமத்தில் மற்றொரு பிரிவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள்  திண்பண்டம் வாங்க வந்தபோது உங்களுக்கு பொருட்கள் தரமாட்டோம் என கூறிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India
சங்கரன்கோவில் அருகே கடையில் தின்பண்டம் வாங்க வந்த சிறுவர்களிடம் ஆதிக்க சாதியினர் பேசும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்குக்கான விசாரணை தற்போது வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ஒரு பிரிவு ஊர் சமுதாய மக்கள் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் இந்த முடிவில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதுவும் கடைகளில் கொடுக்கக் கூடாது எனவும் தீர்மானம் பட்டதாக கூறப்படுகிறது

Also Read: நாங்கள் செல்லும் பாதையே பெரியார் பாதை தான் - மு.க.ஸ்டாலின் பேச்சு

அதன் அடிப்படையில் ஊர்நாட்டமை மகேஷ்குமார் என்பவர் கடைக்கு  மற்றொரு பிரிவு பள்ளி மாணவர்கள்  திண்பண்டம் வாங்க வந்தபோது உங்களுக்கு பொருட்கள் தரமாட்டோம் என கூறிய காட்சி வீடியோ எடுத்து சமூக வளைதளத்தில் பதிவிட்ட நிலையில் அது  வைரலாகி வருகின்றது. இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 



தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த வீடியோவை வெளியிட்ட நாட்டமை மகேஷ்குமார் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர் மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
Published by:Arunkumar A
First published:

அடுத்த செய்தி