Home /News /tenkasi /

பட்டியிலன சிறுவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுப்பு; கடைக்கு சீல் வைத்து நாட்டாமை உள்ளிட்ட 2 பேர் கைது

பட்டியிலன சிறுவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுப்பு; கடைக்கு சீல் வைத்து நாட்டாமை உள்ளிட்ட 2 பேர் கைது

ஊர் நாட்டாமை மகேஷ்குமார் கைது

ஊர் நாட்டாமை மகேஷ்குமார் கைது

பட்டியலின சிறுவர்களுக்கு பொருட்கள் தரமாட்டோம் என கூறிய காட்சி வீடியோ எடுத்து சமூக வளைதளத்தில் பதிவிட்ட காட்சி வைரலாகி வருகின்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India
    சங்கரன்கோவில் அருகே கடையில் தின்பண்டம் வாங்க வந்த சிறுவர்களிடம் தீண்டாமை தூண்டும் வகையில் பேசிய கடைக்காரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்குக்கான விசாரணை தற்போது வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இதுகுறித்து ஒரு பிரிவு ஊர் சமுதாய மக்கள் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் இந்த முடிவில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதுவும் கடைகளில் கொடுக்கக் கூடாது எனவும் தீர்மானம் பட்டதாக கூறப்படுகிறது.

    Also Read : உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? - ராகுல் காந்திக்கு நடிகை குஷ்பு கேள்வி!

    அதன் அடிப்படையில் ஒரு பிரிவு ஊர்நாட்டமை மகேஷ்குமார் என்பவர் கடைக்கு வந்த ஒரு பிரிவு பள்ளி மாணவர்கள் வந்து திண்பண்டம் வாங்க வந்தபோது உங்களுக்கு பொருட்கள் தரமாட்டோம் என கூறிய காட்சி வீடியோ எடுத்து சமூக வளைதளத்தில் பதிவிட்ட காட்சி வைரலாகி வருகின்றது. இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



    தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த வீடியோவை வெளியிட்ட நாட்டமை மகேஷ்குமார் மீது வழக்குபதிவு அவரை தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

     
    Published by:Arunkumar A
    First published:

    Tags: Arrested, Crime News, Tenkasi, Viral Video

    அடுத்த செய்தி