ஹோம் /நியூஸ் /தென்காசி /

அபராதம் விதித்த போலீசுக்கு அரிவாள் வெட்டு - தென்காசியில் இளைஞர் கைது

அபராதம் விதித்த போலீசுக்கு அரிவாள் வெட்டு - தென்காசியில் இளைஞர் கைது

போலீசுக்கு அரிவாள் வெட்டு

போலீசுக்கு அரிவாள் வெட்டு

Tenkasi Crime News: சங்கரன்கோவிலில் அபராதம் விதித்த காவலரை இளைஞர் அரிவாளால் வெட்டிய சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..    

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவல் உட்கோட்டம் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வன். மதுரையை சேர்ந்த இவர் 2009 ஆம் ஆண்டு காவலர் பணிக்கு  தேர்வாகி பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  தென்காசி மாவட்ட எல்கையான வேலாயுதபுரத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் இன்று பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பெருமாள் பட்டியைச் சேர்ந்த காளிராஜ் என்ற இளைஞர் தலைக்கவசம் அணியாமல் வந்துள்ளார். காளிராஜை தடுத்து நிறுத்திய காவலர் தமிழ்ச்செல்வன் அவருக்கு அபராதம் விதித்தாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு  குடிபோதையில் வந்த காளிராஜ் பணியில் இருந்த காவலர் தமிழ்ச்செல்வனை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார். இச்சம்பவத்தில் சுதாரித்துக் கொண்ட காவலர் தமிழ்ச்செல்வன் சற்று விலகவே தனது இடது கையில் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அறிவாளை போட்டு விட்டு காளிராஜ் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார் இதனைத் தொடர்ந்து காவலர் தமிழ்ச்செல்வன் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த தகவலினை அடுத்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் தப்பி ஓடிய பெருமாள் பட்டியைச் சேர்ந்த காளிராஜை பிடிக்க சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதிர் ஆலோசன்படி தனிப்படை அமைக்கப்பட்டு காளிராஜை கைது செய்தனர். மேலும் அவர்  ஓட்டி வந்த பல்சர் இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலரை வெட்டிய சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ச.செந்தில் ( தென்காசி )

First published:

Tags: Crime News, Police, Tamil News, Tenkasi