ஹோம் /நியூஸ் /தென்காசி /

மது போதையில் ஏற்பட்ட தகராறு : நண்பன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற இளைஞர்.. தென்காசியில் பகீர் சம்பவம்.!

மது போதையில் ஏற்பட்ட தகராறு : நண்பன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற இளைஞர்.. தென்காசியில் பகீர் சம்பவம்.!

கொலையான கருப்பசாமி, கைதான செல்வகுமார்

கொலையான கருப்பசாமி, கைதான செல்வகுமார்

Crime News : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே  மது அருந்தும்போது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கல்லால் அடித்து ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள பொய்கை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(34). இவரும் பக்கத்து வீட்டு நண்பருமான செல்வகுமார்(24) ஆகிய இருவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பொட்டல் காட்டில் ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.  அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் அருகில் கிடந்த கல்லை எடுத்து கருப்பசாமி தலையில் போட்டுள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, செல்வகுமார் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.

இச்சம்பவம் பற்றி தகவலறிந்த சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஊரில் மறைந்திருந்த செல்வகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்கள் இருவருக்கும் இடையே மது போதையில் ஏற்பட்ட தகராறு கொலையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : செந்தில் - தென்காசி

First published:

Tags: Crime News, Local News, Tenkasi