முகப்பு /செய்தி /தென்காசி / "அட்ரா மேளத்த..." - மணக்கோலத்தில் குத்தாட்டம் போட்ட 'தென்காசி தம்பதி’

"அட்ரா மேளத்த..." - மணக்கோலத்தில் குத்தாட்டம் போட்ட 'தென்காசி தம்பதி’

மணக்கோலத்தில் குத்தாட்டம் போட்ட புதுமண தம்பதி

மணக்கோலத்தில் குத்தாட்டம் போட்ட புதுமண தம்பதி

Tenkasi viral video | கோயிலில் இருந்து திருமண மண்டபத்திற்கு நடந்து சென்ற மணமக்கள், மணக்கோலத்திலேயே குத்தாட்டம் போட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திருமணமான தம்பதிகள் மேளதாளங்களுக்கு ஏற்றவாறு நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த திருமண தம்பதிகளான மாடசாமி - தங்கமாரி ஆகிய இருவருக்கும் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் நேற்று திருமணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

திருமணம் முடிந்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் அதற்காக மண்டபத்திற்கு சென்று கொண்டிருந்த போது கோவில் வாசல் முன்பு திருமணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மேளதாளத்திற்கு ஏற்றார்போல் புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் உற்சாக நடனம் ஆடினர். அப்போது உறவினர்களும் உடன் சேர்ந்து நடனமாடி அவர்களை மகிழ்வித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செய்தியாளர்: செந்தில், தென்காசி.

First published:

Tags: Dance, Local News, Tenkasi, Viral Video