முகப்பு /செய்தி /தென்காசி / தென்காசி மாவட்டத்தில் ‘திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது’.. விண்ணப்பிக்கும் முறை இதுதான்..

தென்காசி மாவட்டத்தில் ‘திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது’.. விண்ணப்பிக்கும் முறை இதுதான்..

மாதிரி படம்

மாதிரி படம்

 Tenkasi Transgender Award Application | விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்றி 01.02.2023 முதல் 28.02.2023-க்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ள நிலையில் இதில் திருநங்கைகள் விண்ணப்பிக்கும் முறை என்ன என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில், 2022-2023 ஆம் ஆண்டுக்கான திருநங்கையர்களுக்கான முன்மாதிரி விருதானது திருநங்கையர் தினமான ஏப்ரல்-15ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் awards.tn.gov.in பதிவு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்றி 01.02.2023 முதல் 28.02.2023-க்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

2023 ஆம் ஆண்டு திருநங்கையர்தின விருதுக்கான கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:

திருநங்கையர்கள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக முன்னேறி இருத்தல் வேண்டும், குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும், திருநங்கையர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது என்றும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Tenkasi, Transgender