தென்காசியில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகரை அவரது தாயார் மற்றும் மனைவி கண்டித்ததால் மனம் உடைந்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமாரி (35). இவர் சிறு வயது முதலே ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார்.
சமையல் எண்ணெய் பொருட்களை ஊர் ஊராக சென்று விற்பனை செய்யும் வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடும் பழக்கத்தையும் கடைப்பிடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் ரஜினியின் பிறந்தநாளை தனது நண்பருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதற்கு தங்கமாரியின் தாயார் மற்றும் அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது.
ALSO READ | 80 வருடமாக ஒரே குடும்பம் பூஜை செய்யும் கோயில்... தென்காசியில் எங்கு உள்ளது?
இதனால் மனமுடைந்து கடந்த 14ஆம் தேதி இரவில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக தங்கமாரி உயிரிழந்தார்.
உயிரிழந்த தங்கமாரிக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்களை ஆகின்றன என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாவூர்சத்திரம் அருகே ரஜினி ரசிகர் மனம் உடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Rajini Kanth, Rajinikanth Fans, Suicide, Tenkasi