ஹோம் /நியூஸ் /தென்காசி /

தென்காசி எம்எல்ஏ பழனியின் வாகனம் மோதி 4 வயது சிறுவன் உயிரிழப்பு.!

தென்காசி எம்எல்ஏ பழனியின் வாகனம் மோதி 4 வயது சிறுவன் உயிரிழப்பு.!

விபத்து

விபத்து

தென்காசியில் எம்எல்ஏ பழனி நாடாருக்கு சொந்தமான டிராக்டர் மோதி மோதி நான்கு வயது சிறுவன் உயிரிழந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் அதிகமான அளவில் சரல் மண் வெட்டி எடுத்து தென்காசி சட்ட மன்ற உறுப்பினர் பழனி நாடார் அவர்களுக்கு சொந்தமான எஸ்பிஎன் சேம்பர் குவாரிக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

  அவ்வாறு கீழ சுரண்டை பிள்ளையார் கோவில் தெருவில் சென்ற டிராக்டர் வாகனம் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த கீழ சுரண்டை பகுதியை சேர்ந்த ராஜதுரை மகன் நான்கு வயது சிறுவன் ராஜ முகன் என்பவரின் மீது டிராக்டரின் டைலர் டயர் ஏறி இறங்கியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  Also see...மதுபாட்டிலுடன் பள்ளி வகுப்பறைக்கு வந்த மாணவர்கள்.. ஒரு வாரம் சஸ்பெண்ட்

  இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த சுரண்டை காவல் துறையினர் சிறுவன் உடலை மீட்டு தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: MLA, Road accident, Tenkasi