முகப்பு /செய்தி /தென்காசி / பணியில் இருந்த ரயில்வே கேட் கீப்பரிடம் பாலியல் அத்துமீறல்.. தென்காசியில் அதிர்ச்சி..!

பணியில் இருந்த ரயில்வே கேட் கீப்பரிடம் பாலியல் அத்துமீறல்.. தென்காசியில் அதிர்ச்சி..!

பாவூர் சத்திரம்

பாவூர் சத்திரம்

Tenkasi Lady Gate Keeper Harresment Issue | இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் நேற்றிரவு பணியில் இருந்துள்ளார். அப்போழுது அவரின் கேட் கீப்பர் அரைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டதைத் தொடர்ந்து மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து பாவூர்சத்திரம் காவல்துறையினர் மற்றும்  ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ரயில்வே கேட் மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

பாவூர்த்திரத்தில் எப்போதும் ஆள் நடமாட்டமும், போக்குவரத்தும் இருக்கும் பிரதான சாலையில் ரயில்வே பெண் ஊழியருக்கு நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: செந்தில்

First published:

Tags: Crime News, Local News, Tenkasi