முகப்பு /செய்தி /தென்காசி / கடத்தப்பட்ட மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணம்..? காதல் கணவர் கதறல்.. தென்காசியில் பரபரப்பு

கடத்தப்பட்ட மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணம்..? காதல் கணவர் கதறல்.. தென்காசியில் பரபரப்பு

கட்டாய திருமணம் என கணவர் புகார்

கட்டாய திருமணம் என கணவர் புகார்

மனைவி வெளியிட்ட வீடியோவால் மனம் கலங்கிய காதல் கணவர் வினித், தன் மனைவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசியில் காதல் மனைவி கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அந்த பெண் வேறுஒருவருடன் திருமணம் செய்து கொண்டதாக வெளியான வீடியோவால் காதல் கணவர் அதிர்ச்சியடைந்தார்.

தென்காசி மாவட்டம் கொட்டாகுளம் பகுதியை சேர்ந்த மாரியப்பன், வெளிநாட்டில் பணிபுரிந்து தற்போது தென்காசியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த குஜராத் மாநில பெண் கிருத்திகா பட்டேல் என்பவரும் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்தனர்.

இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதியன்று இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இருவரும் அவர்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெண் வீட்டார் கணவர் வினித்தை தாக்கிவிட்டு கிருத்திக்காவை வலுக்கட்டாயமாக தூக்கி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரில் கிருத்திகாவின் பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வினித், காதல் மனைவியை மீட்க போராடி வருகிறார். இந்த நிலையில், வினித்தின் தலையில் இடி விழுவது போல், கிருத்திகா பட்டேல் வேறு ஒருவரும் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், கிருத்திகா தனக்கு மைத்திரீக் பட்டேல் என்பவருடன் திருமணம் முடிந்து விட்டதாகவும், தான் பாதுகாப்பாக உள்ளதாகவும், இது குறித்து யாரும் இடையூறு செய்ய வேண்டாம் எனவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதனை கண்டு பதறிபோன வினித் தனது மனைவியை வேறு ஒருவர் திருமணம் செய்து கொண்டதை கண்டு கலங்கி துடித்தார். தொடர்ந்து பேசிய வினித், தன் மனைவி முழு சம்மதத்துடனே தன்னை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களது பெற்றோரே மிரட்டி வேறு திருமணம் செய்து வைத்ததாகவும், மிரட்டியே கிருத்திக்காவை வீடியோ பதிவு செய்ய வைத்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும், மனைவி வெளியிட்ட வீடியோவில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், தன் மனைவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த சம்பவத்தால் தலை சுற்றி போன போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

செய்தியாளர்: செந்தில், தென்காசி.

First published:

Tags: Local News, Marriage, Tenkasi