தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளத்தில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. எப்போது பள்ளி வளாகம் அருகே பள்ளி பேருந்து நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அப்படி நிறுத்தப்பட்டிருந்த பேருந்திற்குள் ஏறிய இளைஞர்கள், அதே பள்ளி மாணவன் ஒருவனுக்கு ஹான்ஸ் என்ற போதைப் பொருளை கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும் அந்த வீடியோவில், வேண்டாம் என மறுக்கும் சிறுவனை கட்டாயப்படுத்தி அவனது வாயில் போதை பொருளை வைக்கவும் சொல்லுகின்றனர்.
இளைஞர்களின் மிரட்டலால் பயத்தில் அந்த சிறுவன் போதைப் பொருளை வாயில் வைக்க, அதன் நெடி தாங்காமல் அவன் கஷ்டப்படுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மயக்கம் ஏற்பட்ட சிறுவன் பேருந்தின் சீட்டிலேயே அமர்ந்து படுத்தும் விடுகிறார்.
இந்த காட்சிகள் எல்லாம் வீடியோவில் பதிவாகியுள்ளன. சிறுவனுக்கு போதைப் பொருளை கொடுத்த 3 இளைஞர்களில் ஒருவரே இந்த வீடியோவை தனது செல்போனில் எடுத்து இருந்தார். இந்த வீடியோ ஆதரமாக தற்போது அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது.
வீடியோவை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனுக்கு போதைப் பொருளை கொடுத்த 3 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் 17 வயதுக்கு கீழுள்ளவர்கள் என தெரியவந்தது.
ஆனாலும் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து. அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் எச்சரித்து அனுப்பி விட்டனர்.
இதனையடுத்து பள்ளி மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் போதைபொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் கிருஷ்னராஜ் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட கண்காணிப்பாளர் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனை தொடர்பாக தகவல் தருபவர்களின் சுய விபரங்கள் பாதுகாக்கபடும் என கூறினார். பின்னர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
Also see... ஹெல்மெட் போடாம போகாதீங்க கோவை மக்களே..! தீவிர தணிக்கையில் போலீசார்..!
மேலும் 93856 78039, 9489003324, ஆகிய வாட்ஸ் ஆப் எண்களில் புகையிலை பொருட்கள் விற்பது தொடர்பாக தகவல் தெரிவித்தால் ரகசியம் காக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child, Drug addiction, Tenkasi