ஹோம் /நியூஸ் /தென்காசி /

முன்விரோதத்தால் அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள்.. தென்காசியில் பயங்கரம்!

முன்விரோதத்தால் அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள்.. தென்காசியில் பயங்கரம்!

கொலை செய்யப்பட்டவர்கள்

கொலை செய்யப்பட்டவர்கள்

Tenkasi double murder | தந்தையை கொலை செய்ததை கண்ட 17 வயது சிறுவன், கொலை செய்தவரை கத்தியால் குத்தி கொன்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் முன் விரோத காரணமாக இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேவவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் (52), செல்லத்துரை (54). குடும்ப உறவினர்களான இவர்கள் இருவருக்கும் இடையே இட பிரச்னை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை இடப்பிரச்சினை தொடர்பாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த செல்லத்துரை அரிவாளால் ஐயப்பனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்த ஐயப்பனின் 17 வயது மகன் தந்தையை கொன்ற செல்லத்துரையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஐயப்பனின் சடலத்தை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியும், இதேபோல் செல்லத்துரையின் உடலை தென்காசி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய சிறுவனை தீவிர தேடுதலுக்கு பிறகு  கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

 செய்தியாளர்: ச.செந்தில்,தென்காசி.

First published:

Tags: Crime News, Double murder, Local News, Murder case, Tenkasi