முகப்பு /செய்தி /தென்காசி / சாப்பாடு இல்லை.. ஹோட்டலை சூறையாடிய இளைஞர்கள் - தென்காசியில் பரபரப்பு

சாப்பாடு இல்லை.. ஹோட்டலை சூறையாடிய இளைஞர்கள் - தென்காசியில் பரபரப்பு

ஹோட்டல் சூறையாடல்

ஹோட்டல் சூறையாடல்

Tenkasi News : குற்றாலத்தில் நள்ளிரவில் இளைஞர்கள் ஹோட்டலை சூறையாடிய சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாகும். குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் பகுதியில் ராஜபாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று முன்தினம் இரவு காசிமேஜர்புரம் கோவில் திருவிழாவில் கலந்துக்கொண்ட வாலிபர்கள் சிலர் நள்ளிரவு நேரத்தில் சென்று சாப்பாடு கேட்டுள்ளனர்.

கடை அடைக்கும் நேரம் என்பதால் உணவுகள் எல்லாம் காலியாகிவிட்டது. இதனால் ஹோட்டலில் உணவு இல்லை எனக் கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஹோட்டலை சூறையாடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து குற்றாலம் காவல்நிலையத்தில் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஹோட்டலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தகராறில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மகேந்திரன், குட்டிராஜ், கார்த்திக், மாரிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவான நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் நள்ளிரவில் இளைஞர்கள் ஹோட்டலை சூறையாடிய சி.சி.டிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: ச. செந்தில் (தென்காசி)

First published:

Tags: Courtallam, Food, Local News, Tamil News, Tenkasi