ஹோம் /நியூஸ் /தென்காசி /

பிறந்த குழந்தையை கொன்று பையில் வைத்து வீசிய கொடூரம்.. தென்காசியில் பயங்கரம்

பிறந்த குழந்தையை கொன்று பையில் வைத்து வீசிய கொடூரம்.. தென்காசியில் பயங்கரம்

மாதிரி படம்

மாதிரி படம்

Tenkasi baby death | பிறந்த குழந்தையை கொன்று வீசிய கொடூர நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பிறந்து ஒரு நாளான ஆண் குழந்தையை கொன்று குளக்கரையில் வீசி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள குளத்தின் அருகே பிறந்த ஒரு நாளான ஆண் குழந்தை ஒன்று சடலமாக பையில் கட்டி கிடந்துள்ளது. இதனை கண்ட மக்கள் திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் பேரில் சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது எப்படி வீசினார்கள் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் திருவேங்கடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி.

First published:

Tags: Baby, Baby boy killed, Death, Tenkasi