முகப்பு /செய்தி /தென்காசி / மிளா மானை சமைத்து ருசித்த மூவர்... தென்காசி போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினர்!

மிளா மானை சமைத்து ருசித்த மூவர்... தென்காசி போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினர்!

மிளா மானை சமைத்து சாப்பிட்ட 3 பேர்

மிளா மானை சமைத்து சாப்பிட்ட 3 பேர்

Tenkasi mila death | கடையநல்லூரில் செந்நாய் கடித்து உயிரிழந்து கிடந்த மிளா மானை தூக்கி சென்று சமைத்து ருசித்தது கண்டுபிடிக்கப்பட்டது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி அருகே மிளா மானை சமைத்து சாப்பிட்ட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பீட் வனப்பகுதியில், வனச்சரக அலுவலர் சுரேஷ் அறிவுரையின் பேரில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மிளா இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 3 பேரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், கடையநல்லூர் அருகே உள்ள புனையாபுரத்தைச் சேர்ந்த கருப்பையா (33), பேச்சிமுத்து (45), மாரியப்பன் (40) என்பது தெரியவந்தது. வனப்பகுதியில் செந்நாய்கள் கடித்து உயிரிழந்த மிளா இறைச்சியை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேர் மீதும் வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனபகுதிகளுக்கு அத்துமீறி செல்பவர்கள் மீதும் வன உயிரினங்களை வேட்டையாடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி.

First published:

Tags: Death, Deer, Local News, Tenkasi