ஹோம் /நியூஸ் /தென்காசி /

தமிழக ஆளுநர் பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்படுகிறார் - துரை வைகோ விமர்சனம்

தமிழக ஆளுநர் பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்படுகிறார் - துரை வைகோ விமர்சனம்

துரை வைகோ

துரை வைகோ

MDMK Durai Vaiko | தமிழக சட்டசபையின் நிறைவேற்றிய தீர்மானங்களை கிடப்பில் போட்டுள்ளார். எனவே  அவரை மாற்ற வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi, India

  தமிழக ஆளுநர் பாஜகவின் செய்தி தொடர்பாளராகவும், அக்கட்சியின் சித்தாந்தங்களை பரப்பக்கூடியவராக செயல்படுகிறார் எனவே அவரை மாற்ற வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளதாக மதிமுக கட்சியின் தலைமை செயலாளர் துரை வைகோ விமர்சனம் செய்துள்ளார்.

  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய தாலுகாக்களில் உளுந்து, பாசி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். தற்போது மகசூல் குறைவாக கிடைக்கப்பெற்ற நிலையில் பயிர் காப்பீடு வழங்கலாம் என ஆட்சியர் அறிவித்திருந்தார்.

  ஆனால் இதுவரை பயிர் காப்பீடு வழங்காமல் கால தாமதம் ஆகிய நிலையில் மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ விவசாயிகளுடன் ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

  இதையும் படிங்க : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கு: பாஜகவினருக்கான நிபந்தனை ஜாமீனில் மாற்றம்

  இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ,

  “தென்காசியில் மாவட்ட ஆட்சியர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். மேலும் பயிர் காப்பீடு உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆளுநராக செயல்படாமல் பாஜகவின் செய்தி தொடர்பாளராக செயல்படுகிறார். குறிப்பிட்ட கட்சியின் சித்தாந்தங்களை பரப்ப கூடியவராக செயல்படுகிறார்.

  தமிழக சட்டசபையின் நிறைவேற்றிய தீர்மானங்களை கிடப்பில் போட்டுள்ளார். எனவே  அவரை மாற்ற வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

  இந்த சந்திப்பின்போது வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலை குமார், மதிமுக மாநில பொதுசெயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  செய்தியாளர் : செந்தில் - தென்காசி

  Published by:Karthi K
  First published:

  Tags: Durai Vaiko, Tenkasi