ஹோம் /நியூஸ் /தென்காசி /

தென்காசியில் நுங்கு வண்டி ஓட்டி விளையாடி மகிழ்ந்த ஆளுநர் தமிழிசை.. கலகல சம்பவம்!

தென்காசியில் நுங்கு வண்டி ஓட்டி விளையாடி மகிழ்ந்த ஆளுநர் தமிழிசை.. கலகல சம்பவம்!

தமிழிசை சவுந்திரராஜன்

தமிழிசை சவுந்திரராஜன்

Tamilisai soundararajan | தங்களின் ஒருவராக இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாக தமிழிசை பேச்சு.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசியில் நடைபெற்ற காமராஜர் அரங்கம் திறப்பு விழாவில், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் நுங்கு வண்டி ஓட்டி விளையாடி மகிழ்ந்தார்.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காமராஜர் அரங்கம் திறப்பு விழா, நாடார் வாலிபர் சங்க 33வது ஆண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக மாநில துணைத்தலைவர் திரு.கருணாகரன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனி நாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பனை மரங்களால் செய்யப்பட்ட நுங்கு வண்டி, பனை பெட்டி, அலங்கார பொருட்கள் உள்ளிட்டவைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த ஆளுநர்  ஆர்வமுடன் மகிழ்ச்சியுடன் குழந்தையாக மாறி நுங்கு வண்டி ஓட்டினார். மேலும் அலங்கார பொருட்களை கண்டு மகிழ்ந்தார்.

ALSO READ | தமிழிசை பெயரில் அமைச்சரிடம் உதவி கேட்டு மோசடி.. புதுச்சேரியில் பரபரப்பு!

இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அவர், தங்களின் ஒருவராக இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், ஆனால் காவல்துறைக்குத்தான் ஆளுநர் என்பதால் கெடு பிடிகள் அதிகமாக இருக்கிறது, பொதுமக்கள் மன்னித்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் காமராஜர் வழியில் பிறந்தால் இந்த இடத்தை பெற்றுள்ளதாகவும் கூடவே  வெற்றிக்கு மூன்று ரகசியம் உள்ளதாகவும் அவை மூன்றும் உழைப்பு, உழைப்பு உழைப்பு எனக் கூறினார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி

First published:

Tags: Dr tamilisai soundararajan, Local News, Tamilisai, Tamilisai Soundararajan, Tenkasi