தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் - வெண்ணியார் தம்பதிக்கு ராஜலெட்சுமி (21) என்ற மகள் உள்ளனர்.
இந்த நிலையில் மாணவி ராஜலட்சுமி நீட் தேர்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதி தோல்வி அடைந்ததாகவும் தற்போது 3வது முறையாக நம்பிக்கையுடன் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. இந்த சூழலில் செப்டம்பர் 7 தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்ததை தொடர்ந்து தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் மாணவி ராஜலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எதிர்வரும் நீட் தேர்வு முடிவுகள் காரணமாக சோகமாக இருந்த மாணவி ராஜலட்சுமி விரக்தியில் தாய் தந்தையின் மருத்துவ கனவை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த சேர்ந்தமரம் காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also see...நாட்டில் மாணவர்கள் தற்கொலை போக்கு அதிகரிப்பு; காரணங்கள் என்ன?
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் மாணவி ராஜலட்சுமி சேர்ந்து படித்து 3-வது முறையாக மீண்டும் நீட் தேர்வு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளார் : செந்தில், தென்காசி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commit suicide, Neet Exam, Tenkasi