முகப்பு /செய்தி /தென்காசி / அங்கன்வாடி ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் விபத்து: காயமடைந்தவர்களுக்கு உதவிய சங்கரன்கோவில் எம்எல்ஏ

அங்கன்வாடி ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் விபத்து: காயமடைந்தவர்களுக்கு உதவிய சங்கரன்கோவில் எம்எல்ஏ

காயமடைந்தவர்களை உதவிய சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா

காயமடைந்தவர்களை உதவிய சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா

Tenkasi News | இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் சென்னையில் நடைபெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் மாநாட்டில் கலந்துவிட்டு தென்காசிக்கு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். சிவகிரி அருகே வந்தபோது அவ்வழியாக வந்த டிராக்டர் வாகனத்திற்கு வழி விடும் போது நிலை தடுமாறி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த ரேவதி (45), வேல்ச்சாமி(51), ஆறுமுகம் (58), தங்கராஜ், சுயம்புலிங்கம், சிவசுப்பிரமணியம், சோமசுந்தரம், சித்ரா, சங்கரேஸ்வரி, ஐயப்பன், கருப்பசாமி, முத்துமாரி என மொத்தம் 12 நபர்கள் படுகாயம் அடைந்தனர்.

அந்த சமயம் அவ்வழியாக வந்த சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார் இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்ட நிலையில் காயமடைந்தவர்களை துரிதமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்..

செய்தியாளர்: செந்தில்

First published:

Tags: Local News, Tenkasi