ஹோம் /நியூஸ் /தென்காசி /

தென்காசி மாவட்டத்தில் எந்த தொகுதியில் எத்தனை பேர் - வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தென்காசி மாவட்டத்தில் எந்த தொகுதியில் எத்தனை பேர் - வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

மாதிரி படம்

மாதிரி படம்

Tenkasi District News | 5 சட்டமன்ற தொகுதியில் குறைவான வாக்காளர்கள் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியாகும். அதிகமான வாக்காளர்களை தென்காசி சட்டமன்ற தொகுதி கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டார். வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்களை  இணைக்கும் பணி 65 சதவீதம் நிறைவடைந்த நிலையில் 3 மாதங்களில் மீதம் 35 சதவீதம்  நிறைவடையும் எனவும் பேட்டியளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதனை திமுக, அதிமுக, பாஜக கட்சி பிரநிதிகள் பெற்று கொண்டனர்.

தென்காசி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13,12,953 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 6,42,376 பேர், பெண் வாக்காளர்கள் 6,42,376 பேர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 94 பேர் உள்ளனர்.

இதையும் படிங்க : 97 வயது மூதாட்டிக்கு சிறிய துளை மூலம் நவீன சிகிச்சை... தென்காசி அரசு மருத்துவமனை சாதனை!

 தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

1. சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி :

ஆண் வாக்காளர்கள் - 117799,

பெண் வாக்காளர்கள் - 124478

மூன்றாம் பாலினம் - 7,

மொத்தம் - 242284,

2. வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி :

ஆண் வாக்காளர்கள் - 115839,

பெண் வாக்காளர்கள் - 120663,

மூன்றாம் பாலினம் - 4,

மொத்தம் - 236506.

3. கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி:

ஆண் வாக்காளர்கள் - 140768,

பெண் வாக்காளர்கள் - 143279,

மூன்றாம் பாலினம் - 12,

மொத்தம் - 284059.

4. தென்காசி சட்டமன்ற தொகுதி:

ஆண் வாக்காளர்கள் - 14 18 92,

பெண் வாக்காளர்கள் -  148109,

மூன்றாம் பாலினம் - 62,

மொத்தம் - 290063.

5. ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி:

ஆண் வாக்காளர்கள் - 126078,

பெண் வாக்காளர்கள் - 133954,

மூன்றாம் பாலினம் -  9,

மொத்தம் - 260041.

5 சட்டமன்ற தொகுதியில் குறைவான வாக்காளர்கள் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியாகும்.

அதிகமான வாக்காளர்களை தென்காசி சட்டமன்ற தொகுதி கொண்டுள்ளது. இந்த ஆண்டு புதிய வாக்காளர்களாக 7,395 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் தெரிவிக்கும்போது, “வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 65 சதவீதம் நிறைவடைந்த நிலையில் 3 மாதங்களில் மீதம் 35 சதவீதம் நிறைவடையும்” என தெரிவித்தார்.

செய்தியாளர் : செந்தில் - தென்காசி

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tenkasi