ஹோம் /நியூஸ் /தென்காசி /

சொத்துக்காக அரங்கேறிய கொலை.. மருமகனை கொலை செய்த மாமனார்கள் - நடந்தது என்ன?

சொத்துக்காக அரங்கேறிய கொலை.. மருமகனை கொலை செய்த மாமனார்கள் - நடந்தது என்ன?

கொலை செய்யப்பட்ட மருமகன்

கொலை செய்யப்பட்ட மருமகன்

tenkasi | தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சொத்து தகராறில் மருமகனை மாமனார்கள் சேர்ந்து வெட்டி படுகொலை செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirunelveli, India

  தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள தலைவன் கோட்டையை சேர்ந்தவர் அய்யாத்துரை (45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அய்யாதுரையின் சின்ன மாமனார்கள் சின்னபாண்டியன்(48) மற்றும் அலங்கார பாண்டியன் (46) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் நேற்று அய்யாதுரை தனது விவசாய நிலத்திற்கு சென்று விவசாய வேலைகளை கவனிக்க சென்றுள்ளார்.

  அப்போது அங்கே வந்த சின்னபாண்டியனும் அலங்கார பாண்டியனும் சேர்ந்து அய்யா துரையிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் வாக்குவாதம் கைகலப்பாக முற்றவே அலங்கார பாண்டியனும் சின்ன பாண்டியனும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அய்யாதுரையை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

  அய்யாத்துரையின்  அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த உறவினர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

  Also see...புலியுடன் செல்பி எடுக்க பின்தொடர்ந்த கூட்டம்.. அதிர்ச்சி வீடியோ

  சொத்து தகராறில் மருமகனை வெட்டி கொன்ற சின்ன மாமனார்கள் சின்ன பாண்டியனை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள அலங்கார பாண்டியன், பேச்சியம்மாள் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

  மேலும் இச்சம்பவம் குறித்து இந்திய தண்டனை சட்டம் 302, 294,பி, 506 உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக மருமகனையே மாமனார்கள் சேர்ந்து வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  செய்தியாளர்: ச.செந்தில்,தென்காசி  

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, Murder, Tenkasi