Home /News /tenkasi /

ஆலங்குளம் அருகே கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட நபருக்கு மண்டை உடைப்பு

ஆலங்குளம் அருகே கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட நபருக்கு மண்டை உடைப்பு

ஆலங்குளம் கிராமம்

ஆலங்குளம் கிராமம்

Tenkasi | தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிராம சபை கூட்டத்தில் அடிதடி மண்டை உடைப்பு ஏற்பட்டது. இதில் கேள்வி கேட்ட நபரை துணைத் தலைவர் மற்றும் அவரது மகன் இணைந்து தாக்கியதால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட மாயமான் குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் குருவன்கோட்டை கிராமத்தில் இயங்கி வருகிறது.

    நேற்று அதன் வளாகத்தில் தொடங்கிய கிராமசபை  கூட்டத்தின்போது குருவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஊராட்சி மன்ற தலைவி பால்த்தாய் மற்றும் துணை தலைவர் கண்ணன் முன்னிலையில் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது, இந்த பகுதியில் தண்ணீர் வந்து 15 நாட்கள் ஆகிறது, இந்த பகுதி செங்கல் ஆலை, மற்றும் நிறுவனங்களுக்கு வரி பணம் சரியான அளவு பெறபடுகிறது போன்றவை குறித்த கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

    அப்போது கோபமடைந்த துணைத் தலைவர் கண்ணன் எழுந்து நின்று கேள்வி கேட்ட பாஸ்கரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. துணைத் தலைவருடன் இணைந்து அவரது மகன் ரஜேஷ் என்பவரும் சேர்ந்து தாக்கியதால் பாஸ்கருக்கு தலை மற்றும் முகத்தில் இருந்து ரத்தம் வழிந்தது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் பற்றி தகவலறிந்த ஆலங்குளம் போலீசார்  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த அடிதடி சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட வாலிபரை தாக்கிய துணை தலைவர் கண்ணன் மற்றும் அவரது மகனை ஆலங்குளம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Also see... சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடிய அரசுப் பள்ளி

    ஆலங்குளம் அருகே கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட நபருக்கு அடி உதை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் சம்பவ இடத்தில் ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி