ஹோம் /நியூஸ் /தென்காசி /

தென்காசி மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

மின் தடை பகுதிகள்

மின் தடை பகுதிகள்

Tenkasi District | தென்காசி மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலையத்தில் நாளை (13-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : இயற்கை எழில் கொஞ்சும் ஒகேனக்கல்.. குவிந்த சுற்றுலா பயணிகள்.. புகைப்படத் தொகுப்பு!

மின் தடை பகுதிகள்:

கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tenkasi