Home /News /tenkasi /

குற்றாலத்தில் குளிக்க அனுமதி... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

குற்றாலத்தில் குளிக்க அனுமதி... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

குற்றாலம்

குற்றாலம்

Courtalam | பிரதான அருவியான குற்றால மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஆர்பரித்து வரும் தண்ணீரில் வரிசையில் நின்று குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Courtalam (Courtallam), India
    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் ஆர்பரித்து வரும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

    இந்நிலையில் இந்தாண்டு சீசன் கலை கட்டியுள்ள நிலையில ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகமாக உள்ளதால் இங்கு ஔற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் பகுதியில் அதிகளவில் மழை பெய்ததால் இன்று காலை முதல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.  மேலும் அவ்வப்போது அருவிபகுதிக்கு மேல் காட்டு பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட மலைப் பாம்புகளும் விழுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி போலீசார் அருவியில் குளிக்க தடை விதித்தார்.



    Also see... ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு...

    இந்த நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்ததையடுத்து பிரதான அருவியான குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளித்தனர். மேலும் ஆண்கள் பகுதியில் தண்ணீர்வரத்து அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரிசையில் நின்று குளிக்க அனுமதி வழங்கியுனர். இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tenkasi

    அடுத்த செய்தி